ஆப்கானிஸ்தானில் பழைய குண்டு வெடித்து 4 மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பழைய குண்டு வெடித்து 4 மாணவர்கள் உயிரிழப்பு

படம்: இபிஏ

20 Nov 2026 - 10:02 pm

1 mins read

காபுல்: ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபாரா மாவட்டத்தில் ஒரு பழைய வெடிகுண்டு வெடித்துச் சிதறிய விபத்தில் நான்கு மாணவர்கள் உயிரழந்ததோடு இருவர் காயமடைந்தனர் என்று அந்நாட்டுக் காவல்துறை வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தெரிவித்தது.

“அம்மாநிலத்தின் பக்வா வட்டாரத்தில் இருந்த மாணவர்கள் சமயப் பள்ளியின் அருகே மதிய வேளை ஓய்வு நேரத்தில் ஒரு வெடிக்காத குண்டைக் கண்டனர். அக்குண்டை அவர்கள் பள்ளிக்குள் எடுத்துச்சென்றுதோடு அங்கிருந்த மற்ற இளைய மாணவர்கள் அதனை தொட்டதால் அது வெடித்துவிட்டது. அதில் நால்வர் மாண்டதோடு இருவர் காயமடைந்தனர்,” என்று காவல்துறை பேச்சாளர் கலிமுல்லா நங்கயல் விளக்கினார்.

கொல்லப்பட்ட மாணவர்களின் வயது 10 முதல் 16 வரை என்று காவல்துறை கூறியது. காயமுற்ற மாணவர்கள் மத்திய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானைவிட்டு ஒன்றுபட்ட ரஷ்யாவின் சோவியத் துருப்புகள் 1989ஆம் ஆண்டு வெளியேறிய பிறகு போரில் கைவிடப்பட்ட ஆயுதங்களும் குண்டுகளும் வெடித்ததால் இதுவரை 45,000 பேர் அந்நாட்டில் உயிரிழந்துவிட்டனர் என்று ஐக்கிய நாட்டு கண்ணிவெடி அகற்றும் சேவை தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் ஆப்கானிஸ்தான் முழுவதும் போர் ஆயுதங்கள் வெடித்த சம்பவங்களில் 324 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் உறுதிப்படுத்தியது. அவ்வாறு பலியான அல்லது காயமடைந்த பத்தில் எண்மர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்