பிரிட்டன்: இங்கிலாந்தின் தென் யோர்க்ஷியர் பகுதியில் உள்ள சலவைக் கடையில் ஜீன்சைக் கொண்டு திருடனுடன் வெற்றிகரமாகச் சண்டையிட்டார் ஓய்வுபெற்ற முதியவர் ஒருவர்.
ஜனவரி 7ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவத்தில், திரு ரோன் குரோக்கர், 84, அந்தக் கடையில் தமது துணிகளை காயவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்திருந்த ஆடவர் ஒருவர் அந்தக் கடைக்குள் நுழைந்து பணம் கேட்டு மிரட்டினார்.
அந்த முதியவர் திருடனைக் கடையிலிருந்து வெளியே தள்ளினார். இருப்பினும், அந்தத் திருடன் மீண்டும் கடைக்குத் திரும்பினார். திரு குரோக்கர் அங்கிருந்த ஜீன்சைப் பயன்படுத்தி, அந்தத் திருடனுடன் சண்டையிட்டு, தம்மை வெற்றிகரமாகப் பாதுகாத்துக்கொண்டார்.
‘‘நான் திருடனைத் தள்ளியதில், அவன் சாலையில் உருண்டோடினான்,’ என்று திரு குரோக்கர், பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

