தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்ய எரிவாயு ஆலை வெடிப்பு: ஒருவர் மரணம், ஒன்பது பேர் காயம்

1 mins read
493547d4-1dfb-4f8a-a123-d246c557d439
ஆலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வர போராடிய தீயணைப்பாளர்கள். - படம்: இணையம்

மாஸ்கோ: ரஷ்யாவின் ஈஸ்ட் யுரேன்கோய் எரியாவு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் மரணமடைந்தார்.

வெடிப்பின் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்தனர்.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

அந்த ஆலையை ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று ஏற்று நடத்துகிறது.

ஆலையின் ஊழியர்கள் சில சாதனங்களைப் பழுதுபார்க்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது வெடிப்பு ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்த ரஷ்ய ஊடகம், ஆலையைச் சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆபத்து இல்லை என்று கூறியது.

காயமடைந்த ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்