தொடரும் போராட்டங்கள்: பிரெஞ்சு அதிபருக்குப் புதிய நெருக்கடி

தொடரும் போராட்டங்கள்: பிரெஞ்சு அதிபருக்குப் புதிய நெருக்கடி

படம்: ராய்ட்டர்ஸ்

26 Oct 2026 - 8:30 am

1 mins read

பாரிஸ்: பிரான்சில் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து நெருக்கடி அளிக்கும் நோக்கில் மேலும் பல போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) அழைப்பு விடுத்துள்ளன.

சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற நாடு தழுவிய பேரணிகளில் 410,000 பேர் பங்கேற்றனர். வன்முறையைத் தவிர்க்க 70,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனால் அக்டோபர் 17ஆம் தேதி நிகழ்ந்தது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாகப் பிரெஞ்சு உள்துறை அமைச்சு கூறியது.

சம்பளம், வாழ்க்கைச் செலவு, பொதுச் சேவைகள் குறித்த அதிருப்தி மாணவர்களைத் தாண்டி பெரியவர்களிடமும் இப்போது போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அக்டோபர் 31ஆம் தேதி போராட்டங்களுக்கும் நவம்பர் 5ஆம் தேதி வேலைநிறுத்தத்திற்கும் தொழிலாளர் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

எஸ்யுடி கல்விச் சங்கம் அக்டோபர் 31 போராட்டத்திலும், மஞ்சள் சட்டை இயக்கம் அடுத்த சனிக்கிழமை போராட்டத்திலும் இணைகின்றன.

தற்போதுள்ள போராட்டம் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மஞ்சள் சட்டை இயக்கத்தின் போராட்டம் போல் வளர்ந்துள்ளது.

அதனால் கோரிக்கையை அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால், தற்போது நிலவும் நிதி நெருக்கடியால் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அவருக்குக் கடினமாக உள்ளது. அடுத்த ஏப்ரலில் அவரது பதவிக்காலமும் முடிவடைகிறது.

குறிப்புச் சொற்கள்