லண்டன்/மாஸ்கோ: பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக், அதன் கூட்டணியில் இணைந்துள்ள நட்பு நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து டிசம்பர் மாதம் வரையில் அவற்றின் இலக்குகளை நிலையாக வைத்துக்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளன.
எதிர்பார்ப்புகளின்படி, அடுத்த ஆண்டுவரை அமைப்பின் உற்பத்திக்கான கொள்கை முடிவுகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்போவதில்லை என்று அவை உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க-ஈரான் போரினால் ஓபெக் கூட்டமைப்பு ஏற்கெனவே ஏற்றுமதித் தடைகளால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.
ஓபெக்கின் ஏழு அடிப்படை உறுப்பு நாடுகளான சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், குவைத், அல்ஜீரியா, கஸக்ஸ்தான், ஓமான் ஆகியன இணையத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நடந்த சந்திப்புக் கூட்டத்தில் அவற்றின் முடிவுகளைத் தெரிவித்தன.
மத்தியக் கிழக்குப் போரில் பாதிக்கப்பட்ட ஓபெக்+ கூட்டமைப்பில் உள்ள வளைகுடா நாடுகள் அவற்றின் ஏற்றுமதிகளை அதிக அளவில் செய்துவரும் நிலையிலும் அவை வைக்கப்பட்ட இலக்குகளைவிட குறைவாகவே தற்போது உற்பத்தி செய்கின்றன.
ஓபெக்+ கூட்டமைப்பில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளுடன் ரஷ்யாவும் உள்ளது. அந்த ஏழு நாடுகளுடன் மே மாதம் அதிலிருந்து வெளியேறிய ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் அண்மைய ஆண்டுகளாக மாதந்தோரும் சந்தித்து பெட்ரோலிய உற்பத்தி குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து வந்தன.
21 நாடுகள் உறுப்பினராக உள்ள ஓபெக்+ அமைப்பு இவ்வாண்டு நவம்பர் 29ஆம் தேதி சந்தித்து 2027ஆம் ஆண்டுக்கான பெட்ரோலிய உற்பத்தி இலக்குகளை நிர்ணயிக்கவுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துரைத்தனர்.
ஓபெக் அமைப்பில் 12 உறுப்பு நாடுகள் உள்ளன:அல்ஜீரியா, காங்கோ, இக்குவடோரியல் கினி, கபொன், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், செனிசுவெலா ஆகியன அவை.
ஒபெக்+ கூட்டமைப்பில் மேலும் ஒன்பது நாடுகள் பங்காளிகளாக அங்கம் வகிக்கின்றன: ரஷ்யா, கஸக்ஸ்தான், ஓமான், அசர்பைஜான், பஹ்ரைன், புருணை, மலேசியா, மெக்சிகோ, சூடான் ஆகிய நாடுகள் அவையாகும்.
