எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு (ஓபெக் பிளஸ்) எண்ணெய் உற்பத்தி அளவைத் தொடர்ந்து நிலையாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய அளவில் எரிபொருள் ஏற்றுமதியில் ஈடுபடும் வெனிசுவேலாவின் அதிபரின் கைப்பற்றல், சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையிலான பதற்றம் ஆகியவற்றுக்கு இடையில் இந்தக் கடப்பாட்டை ‘ஓபெக் பிளஸ்’ அமைப்பின் எட்டு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) தெரிவிக்கும் என நம்பப்படுகிறது.
உலகின் கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட பாதி அளவை சவூதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கஸக்ஸ்தான், குவைத், ஈராக், அல்ஜீரியா, ஓமான் ஆகிய நாடுகள் உற்பத்தி செய்து வருகின்றன.
2025ல் எண்ணெய் விலைகள் 18 விழுக்காட்டுக்குக் கீழ் குறைந்ததை அடுத்து இந்நாடுகள் சந்திக்கின்றன. 2020ல் ஆகப் பெரும் எண்ணெய் விலை வீழ்ச்சியாக இது உள்ளது.
கடந்த மாதம், சவூதி அரேபியா ஆதரிக்கும் அரசைக் கொண்டுள்ள ஏமனிடமிருந்து நிலப்பகுதி ஒன்றை ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் கைப்பற்றியதை அடுத்து அவ்வட்டாரத்தில் பதற்றம் கூடியுள்ளது.

