தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசிப்பிடம் திரும்ப எல்லையோரக் குடியிருப்பாளர்களுக்கு உத்தரவு

1 mins read
c9afb270-e9a3-4cfb-8350-da04040ce316
எல்லையோரச் சண்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாகத் தாய்லாந்தும் கம்போடியாவும் தெரிவித்துள்ளன. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: அண்மையில் தாய்லாந்து ராணுவத்துக்கும் கம்போடிய ராணுவத்துக்கும் இடையே எல்லையோரத்தில் சண்டை மூண்டது.

அப்போது எல்லையோரத்தில் வசித்தவர்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து வெளியேறினர்.

தற்போது போர் நிறுத்தம் நடப்பில் உள்ளது.

இந்நிலையில். வசிப்பிடத்துக்குத் திரும்புமாறு எலலையோரக் குடியிருப்பாளர்களுக்கு தாய்லாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சேதமடைந்த அப்பகுதிகளுக்கான பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியை அது ஒதுக்கியுள்ளது. கிராமப் பாதுகாப்புப் பிரிவுகளுக்காக தாய்லாந்து பாட் 117 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரமும் சுகாதாரமும் மதிப்பீடு செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்