மலேசிய-தாய்லாந்து எல்லைக்கு அருகே படகு மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை

1 mins read
71edd898-7c5f-46fa-bf9d-d5a705e9d078
படகு மூழ்கியதில் மேலும் பலர் உயிரோடு மீட்க வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது. - கோப்புப் படம்: ஊடகம்

கோலாலம்பூர்: தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.

பத்து பேர் உயிரோடும் ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டதாக மலேசிய கடல்துறை ஆணையம் தெரிவித்தது.

மியன்மாரின் புத்திடாவுங்கிலிருந்து சுமார் 300 குடியேறிகளுடன் புறப்பட்ட கப்பல் மூழ்கிய மூன்று நாள்களுக்குப் பிறகு கடலில் மூழ்கியதும். மேலும் பலர் கண்டுபிடிக்கப்படலாம் என்று வடக்கு மலேசிய மாநிலங்களான கெடா மற்றும் பெர்லிசின் கடல்துறை ஆணையத்தின் இயக்குநர் முதல் அட்மிரல் ரோம்லி முஸ்தபா தெரிவித்தார்.

லங்காவிக்கு அப்பால் நீரில் மீட்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களில் மூன்று பேர் மியன்மாரைச் சேர்ந்த ஆண்கள். இருவர் ரொஹிங்கியா ஆண்கள். ஒரு பங்ளாதேஷ் ஆடவரும் மீட்கப்பட்டவர்களில் அடங்குர். ஒரு சடலம் ரொஹிங்கியா பெண்ணினுடையது என்று கெடா காவல்துறைத் தலைவர் அட்ஸ்லி அபு ஷாவை மேற்கோள்காட்டி பெர்னாமா ஊடகம் குறிப்பிட்டது.

மியன்மாரில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. மியன்மாரில் அவர்கள் தெற்காசியாவிலிருந்து குடியேறிய வெளிநாட்டு ஊடுருவல்காரர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களுக்கு குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை நோக்கி பெரிய கப்பலில் அகதிகள் புறப்பட்டனர். எல்லையை நெருங்கியதும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காக மூன்று சிறிய படகுகளுக்கு மாற அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு படகுகளிலும் சுமார் 100 பேர் ஏற்றப்பட்டிருந்தனர் என்று திரு அட்ஸ்லியைச் சுட்டிக் காட்டி ஊடகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்