தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலஸ்தீனர்கள் இடம்பெயர்வு: நெட்டன்யாகுவின் கருத்துகளை மறுத்தது சவூதி

1 mins read
dcf082ff-e1ba-4532-b0d2-43fc4c1d98c2
வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) செய்தியாளர்களிடம் பேசும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: சவூதி அரேபியாவிலிருந்து பாலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்வது குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கருத்துகளை சவூதி பகிரங்கமாக மறுத்துள்ளது.

சவூதி அரேபியாவில் பாலஸ்தீன நாடு அமைக்கப்படுவது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் சூசகமாகக் கூறியுள்ளனர். நெட்டன்யாகு ஆதரவான ‘சேனல் 14’ ஒளிவழியில் அவரைப் பேட்டி எடுத்த ஒருவர், ‘பாலஸ்தீன நாடு’ என்பதற்குப் பதிலாக ‘சவூதி நாடு’ எனத் தவறுதலாகக் கூறிய பின்னர் அதைச் சரிசெய்தார். திரு நெட்டன்யாகு அதற்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 6) நகைச்சுவையாகப் பதிலளித்ததாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து சவூதி வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) வெளியிட்ட அறிக்கையில் திரு நெட்டன்யாகுவின் பெயரைக் குறிப்பிட்டாலும், சவூதி மண்ணில் பாலஸ்தீன நாடு அமைக்கப்படுவது பற்றி அவரின் கருத்துகளைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், இஸ்ரேலின் கருத்துகளுக்கு எகிப்தும் ஜோர்தானும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் யோசனையை ‘சவூதியின் இறையாண்மையை அத்துமீறுவதாக’ அவை கருதின.

திரு நெட்டன்யாகுவின் கருத்துகளை அவ்விரு ‘சகோதரத்துவ’ நாடுகள் மறுத்ததற்கு தாம் மதிப்பளிப்பதாக சவூதியின் அறிக்கை கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிந்ததும் இஸ்ரேலிடமிருந்து காஸாவை அமெரிக்கா கைப்பற்றும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் அதிரடியாகக் கூறியதைத் தொடர்ந்து, காஸாவில் பாலஸ்தீனர்களின் கதி குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. திரு டிரம்ப்பின் கருத்துகளுக்கு அரபு நாடுகள் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்