ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தொழில்துறை மாநிலமாக விளங்கும் பான்டெனில் உள்ள சிலிகான் நகரில் ரசாயனக் கிடங்கு ஒன்றிலிருந்து தழைம (நைட்ரிக்) அமிலம் கசிந்ததில் பலர் பாதிப்படைந்தனர்.
தழைம அமிலப் புகையைச் சுவாசித்த பலர் நோய்வாய்ப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இந்தோனீசியாவின் தொழில்துறை சார்ந்த பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளைக் காட்டியுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரசாயனக் கிடங்கை நடத்தும் நிறுவனத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிடி வோபாக் டர்மினல் மெராக் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ரசாயனக் கிடங்கிலிருந்து அடர்த்தியான, ஆரஞ்சு நிறப் புகைகள் வெளியேறியது குறித்து முதன்முதலாக ஜனவரி 31ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.

