தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவிலிருந்து அமெரிக்கா சென்றடைந்த ‘பாண்டா’ கரடிகள்

1 mins read
e26721c3-b15a-4c20-bdcb-31972c612e9e
ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 வகை விமானம் மூலம் ‘பாவ் லி’, ‘சிங் பாவ்’ எனும் இரண்டு ‘பாண்டா’ கரடிகள் சீனாவிலிருந்து அமெரிக்கா சென்றடைந்தன. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: சீனாவிலிருந்து இரண்டு ‘பாண்டாக்கள்’ அமெரிக்காவின் வாஷிங்டன் நகர விலங்குத் தோட்டத்தைச் சென்றடைந்துள்ளன.

மூன்று வயதாகும் அவை, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) அங்குச் சென்றடைந்தன.

ஆண் பாண்டாவின் பெயர் பாவ் லி என்றும் பெண் பாண்டாவின் பெயர் சிங் பாவ் என்றும் கூறப்பட்டது.

சரக்கு ஏற்றிச் செல்லும் ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 வகை விமானம் மூலம் அவை சீனாவிலிருந்து அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டன.

அந்த விமானத்திற்கு ‘பாண்டா எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டதாக ஸ்மித்சோனியன் விலங்குத் தோட்டம் கூறியது.

லாரிகளில் விலங்குத் தோட்டத்தைச் சென்றடைந்த இரு பாண்டாக்களும் தங்கள் புதிய வசிப்பிடத்தை ஆர்வத்துடன் சுற்றிப்பார்க்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.

பராமரிப்பாளர்கள் அவற்றுக்கு உணவாகப் போதிய அளவில் மூங்கிலை அங்கு வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, இரு பாண்டாக்களும் 30 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படும்.

2025ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வாக்கில் பொதுமக்கள் அவற்றைப் பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்