தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தில் துர்நாற்றம், பயணிகள் வெளியேற்றம்!

1 mins read
காணொளி இணைப்பு!
eff0f132-3214-4c62-80a8-253f32836fd0
சறுக்குமூலம் விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள். - காணொளிப்படம்: எக்ஸ்

ஒலேண்டோ: விமானத்தில் கடும் நாற்றம் அடித்ததால் பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது.

கடந்த புதன்கிழமை (மார்ச் 27) மாலை சார்லட் டக்ளஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஒலேண்டோ நோக்கி ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் புறப்படவிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அவ்விமானத்தில் இருந்த 226 பயணிகள் விமான இணைப்புப் பாலம் வழியாகவும் வெளியேற்றச் சறுக்கு வழியாகவும் வெளியேறினர்.

அப்படிச் சறுக்கியபோது பயணி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

கடும் நெடி வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றும் ஆயினும், விமானத்தினுள் புகையோ தீயோ இல்லை என்றும் ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ‘ஃபாக்ஸ் பிஸ்னஸ்’ ஊடகத்திடம் தெரிவித்தது.

இச்சம்பவத்திற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட அந்நிறுவனம், சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியது.

குறிப்புச் சொற்கள்