தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப், புட்டின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கேள்விக்குறி

2 mins read
472f98fa-a5ee-4ce5-b50b-be04925850f1
புட்டினுடன் மேற்கொண்ட அழைப்புக்குப் பின்னர், ரஷ்யாவும் உக்ரேனும் உடனடியாக சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று டிரம்ப் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: உக்ரேன் போரை 24 நான்கு மணி நேரத்தில் முடிப்பதாகக் கடந்த ஆண்டு கூறிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாமும் அதிபர் விளாடிமிர் புட்டின் சந்திக்கும் வரையில் இந்தப் பூசல் முற்றுபெறாது எனக் கடந்த வாரம் கூறியிருந்தார்.

ஆனால், திங்கட்கிழமையன்று இந்த நிலவரம் மாற்றம் கண்டுள்ளதாக ஆராயப்பட்டுள்ளது.

திரு புட்டினுடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேசிய பிறகு, அமைதி ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வழியாகத்தான் உறுதி செய்யப்பட முடியும் என்றும் இதற்கு போப்பாண்டவர் ஒருவேளை உதவி அளிக்கலாம் என்றும் திரு டிரம்ப் கூறினார்.

இருந்தபோதும், அமைதிக்கான நம்பிக்கையைத் திரு டிரம்ப் இழப்பதாகத் தெரியவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளைப் போரளிகள் உடனடியாகத் தொடங்கப்போவதாக திரு டிரம்ப் கூறினார்.

இந்தக் கூற்று, ரஷ்யாவின் கண்ணோட்டத்துடன் முரண்படுகிறது. வருங்கால உத்தேச அமைதி ஒப்பந்தத்திற்கான ஆவணத்தை உக்ரேனுடன் உருவாக்கத் தயார் என்பததைத்தான் திரு புட்டின் இதுவரை கூறியிருந்தார். இருந்தபோதும், அமைதி ஒப்பந்தத்திற்கான ரஷ்யத் தரப்பின் கடப்பாட்டை இது பிரதிபலிக்கவில்லை என்பது கவனிப்பாளர்களின் கருத்து.

எந்தத் தீர்வும் போரின் அடிப்படைக் காரணங்களைக் கையாளவேண்டும் என்றும் திரு புட்டின் மீண்டும் கூறினார். ஐரோப்பாவுடன் கூடுதல் நெருக்கத்தை உக்ரேன் விரும்பியது ஒரு காரணமாகவும் ரஷ்யா முன்னதாகக் கூறியிருந்தது.

திரு புட்டினுடன் மேற்கொண்ட அழைப்புக்குப் பின்னர், ரஷ்யாவும் உக்ரேனும் உடனடியாக சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று திரு டிரம்ப் கூறினார்.

ஆனால், இரு நாட்டுக்கு இடையிலான பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகளிலிருந்து தாம் விலகப்போவதில்லை என்று தெரிவித்த திரு டிரம்ப், அதே நேரத்தில் தமக்கும் எல்லைக்கோடு இருப்பதாகவும் கூறினார். “இதில் ஆணவம் தலைதூக்குகிறது என்றாலும் ஏதோ ஒன்று நடக்கும் என்று நினைக்கிறேன். அப்படி அது நடக்காவிட்டால் நான் விலகி அவர்கள்தான் தொடரவேண்டும்,” என்று அவர் கூறினார்.

டிரம்ப், புட்டின் அழைப்புக்குப் பிறகு பேசிய உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி, பேச்சுவாரத்தைகளிலிருந்து அமெரிக்கா விலகாமல் இருப்பது முக்கியம் என்று திங்கட்கிழமையன்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்