தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்ரா ஹைட்ஸ் தீயால் பாதிக்கப்பட்டோருக்கு ஒதுக்குப்புறத்தில் வாடகை வீடு வழங்கப்படவில்லை

1 mins read
2a7b8917-db0a-4437-bc4b-5d9a385d4464
ஏப்ரல் ஒன்றாம் தேதி புத்ரா ஹைட்ஸ் பகுதியில் தீ மூண்டது. - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

செப்பாங்: மலேசியாவில் புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தாங்கள் ஒதுக்குப்புறமான பகுதிகளில் தற்காலிக வாடகை வீடுகள் வழங்கவில்லை என்று சிலாங்கூர் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் வீடமைப்பு, கலாசாரத் துறைக்கான அந்த மாநிலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ‌ஷா, பாதிக்கப்பட்டோருக்கு மாநிலம் முழுவதும் உள்ள காலியான வீடுகள் தற்காலிகத் தங்குமிடங்களாக வழங்கப்பட்டன என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டோர் தங்களின் தேவைகளுக்கேற்ப தற்காலிகத் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வாடகை வீட்டைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நாங்கள் (பாதிக்கப்பட்டோருக்கு) அளிக்கிறோம். தங்களுக்கு ஏற்ற வீட்டை பாதிக்கப்பட்டோர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,” என்று திரு போர்ஹான் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சிலாங்கூர் அரசாங்கம் ஒதுக்குப்புறங்களில் தற்காலிக வீடுகளை வழங்குவதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் இதுகுறித்து தெளிவுபடுத்தியிருப்பதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது.

மாதத்துக்கு 850 ரிங்கிட் வாடகைக்கு 100 தற்காலிக வீடுகளை சிலாங்கூர் அரசாங்கம் வழங்குவதாக திரு போர்ஹான் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்