பாலஸ்தீன கிளர்ச்சிக்குழுவான ஹமாசுக்கு மில்லியன் யூரோக்கள் கணக்கில் நிதி திரட்டி சந்தேகத்தின்பேரில் எழுவர் கைது செய்யப்பட்டதாக இத்தாலிய காவல்துறை சனிக்கிழமை (டிசம்பர் 27) தெரிவித்துள்ளது.
அந்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்கள் இருவர்க்கு எதிராகவும் காவல்துறையினர் கைதாணை பிறப்பித்துள்ளனர்.
பாலஸ்தீன குடிமக்களை ஆதரிப்பதாகக் கூறும் இந்நபர்கள், தங்களது அமைப்பு ஒன்றை ஹமாசுக்கு நிதி திரட்டுவதற்காகப் பயன்படுத்தி வருவதாகக் காவல்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
சம்பந்தப்பட்ட ஒன்பது தனிநபர்களும் காஸாவிலும் இஸ்ரேலிலும் தளங்கொண்டுள்ள ஹமாஸ் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குக் கிட்டத்தட்ட 7 மில்லியன் யூரோ வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
வசூலிக்கப்பட்ட தொகை, பயங்கரவாத நடவடிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கவால்துறை அறிக்கை கூறியது.
கைதானோரில் இத்தாலிய பாலஸ்தீன சங்கத்தைச் சேர்ந்த முகமது ஹனோனும் அடங்குவார் என ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

