மனிலா: மத்திய பிலிப்பீன்சை செவ்வாய்கிழமை (செப்டம்பர் 30) உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 72க்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டு குடிமைத் தற்காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 294 பேர் காயமடைந்தனர் என்று அமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 2) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மாண்டோர் அனைவரும் மத்திய விஸாயாஸ் வட்டாரத்தில் இருந்தவர்கள் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
சிபு தீவுக்கு அருகில் உள்ள நீர்ப் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன, பாலங்களும் பல இடங்களும் சேதமுற்றன. அவற்றுள் 100 ஆண்டுக்கு மேல் பழைமையான தேவாலயமும் அடங்கும்.
இதற்குமுன் 2013ஆம் ஆண்டு சிபுவில் ஏற்பட்ட ஆக வலுவான 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அண்டைத் தீவான போகோவையும் விட்டுவைக்கவில்லை. நிலநடுக்கத்தில் அங்கு 222 பேர் மாண்டனர்.
பிலிப்பீன்சில் வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் 800க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உணரப்படும்.