தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சைப் பயமுறுத்தும் நான்காவது புயல்: 2,500 கிராமங்களுக்கு எச்சரிக்கை

1 mins read
2c2a2e94-a1b7-4dc2-99ce-d2ff96577bc0
ஒரே மாதத்தில் மூன்று புயல்கள் ஏற்கெனவே பிலிப்பீன்சைச் சீரழித்துவிட்டன. 159 பேர் உயிரிழந்துவிட்டனர். - படம்: இபிஏ

மணிலா: கடுமையான டோரஜி புயலின் சீற்றம் காரணமாக பிலிப்பீன்ஸின் 2,500 கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை பத்திரமான இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

நாட்டின் வடக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் டோரஜி, ஒரு மாத காலத்தில் பிலிப்பீன்ஸை சீர்குலைக்கும் நான்காவது புயல் ஆகும்.

ஏற்கெனவே உருவான டிராமி, கோங்-ரி, யின்ஸின் ஆகிய கடுமையான புயல்களில் இருந்து தப்பிக்க 700,000 பேர் நிவாரண முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

புயல் காற்றின் சீற்றத்தில் அவர்களின் வீடுகள் முற்றாகச் சேதமடைந்துவிட்டன.

அந்த மூன்று புயல்களிலும் சிக்கி 159 பேர் மாண்டுவிட்டனர். புதிதாக உருவாகி இருக்கும் டோரஜி திங்கட்கிழமை (நவம்பர் 11) பிலிப்பீன்சைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலோகோஸ், காகயான் வேலி, கார்டிலேரா போன்ற வட்டாரங்களைச் சேர்ந்த 2,500 கிராமங்களில் வசிக்கும் மக்கள் வேகமாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகச் செயலார் ஜோன்விக் ரெமுல்லா இதனைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்