சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ள பிலிப்பீன்ஸ்

1 mins read
c74a1c80-83bd-4aab-97c9-bd78b7d76ab7
மணிலாவுக்கு அருகில் பத்தாங்காஸ் மாநிலத்தில் உள்ள ஏரியில் அமைந்துள்ள 311 மீட்டர் உயரமான ‘தால்’ எரிமலை. - படம்: மிஷேல் பரோய்ன்/எக்ஸ்

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் உள்ள சிறிய எரிமலை ஒன்றிலிருந்து சராசரி அளவுக்கு அதிகமாக அமில வாயுவும் புகையும் வெளியானதைத் தொடர்ந்து ஐந்து நகரங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

வெளியே வராமல் இருக்கும்படி அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

‘தால்’ எனும் அந்த எரிமலையிலிருந்து வெப்பமான தீக்குழம்பு வெளியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

மணிலாவுக்கு அருகில் பத்தாங்காஸ் மாநிலத்தில் உள்ள ஏரியில் அமைந்துள்ள 311 மீட்டர் உயரமான தால் எரிமலை பிலிப்பீன்சில் அதிகம் வெடிக்கக்கூடிய 24 எரிமலைகளில் ஒன்றாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்