மணிலா: பிலீப்பீன்சில் உள்ள கன்லோன் எரிமலை செப்டம்பர் 11ஆம் தேதி நச்சு வாயுவை கக்கியுள்ளது.
சில நாள்களுக்கு முன்னரே விஞ்ஞானிகள் கன்லோன் எரிமலை குமுறக்கூடும் என்று எச்சரித்தனர்.
அதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்கள் கருதி செப்டம்பர் 10ஆம் தேதி 300க்கும் அதிகமானவர்கள் அவ்வட்டாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பள்ளி, சமூக நிலையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிமலை அடிவாரத்தில் வசிக்கும் விவசாயிகள் கடுமையான ‘சல்பர்’ வாசனை வருவதாகக் கூறினர்.
எரிமலை நச்சுவாயுவை கக்கியதால் கன்லோன் நகரத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளங்கள் சில மூடப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் கன்லோன் எரிமலை 15 முறை குமுறியுள்ளது.
1996ஆம் ஆண்டு கன்லோன் எரிமலை குமுறியதால் மூன்று மலையேறிகள் உயிரிழந்தனர்.