நீர் சறுக்கு விளையாட்டில், கடல் விலங்கால் தாக்கப்பட்டப் புகைப்படக்காரர்

நீர் சறுக்கு விளையாட்டில், கடல் விலங்கால் தாக்கப்பட்டப் புகைப்படக்காரர்

1 mins read
புகைப்படக்காரரைக் கடித்தது கடல் சிங்கம் அல்லது சுறாமீனாக இருக்கலாம்
0580a8c5-64be-449c-90a7-c1925067c947
நியூசிலாந்தில் நடைபெறும் உலக நீர் சறுக்குப் போட்டியில் ஒரு விளையாட்டாளர். - படம்: WSL/ ஃபேஸ்புக்

வெல்லிங்டன்: நியூசிலாந்தின் ரக்லான் என்ற பகுதியில் நடைபெறும் உலக நீர் சறுக்கு விளையாட்டுப் போட்டியில், கடலுக்கு அடியில் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தவரை திங்கட்கிழமை (மே 25) ஒரு கடல் விலங்கு கடித்துக் காயப்படுத்திவிட்டது.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரைத் தாக்கிய விலங்கு அடையாளம் காணப்படவில்லை. அது ஒரு சுறாமீன் அல்லது கடல் சிங்கமாக இருக்கலாம் என்று மருத்துவர்களால் நம்பப்படுகிறது.

நீர் சறுக்கு விளையாட்டுப் போட்டி சில மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. காயம் அடைந்த புகைப்படக்காரரின் உடல் நலம் சீராக இருப்பதாக உலக நீர் சறுக்கு ‘லீக்’ போட்டியின் (WSL) ஏற்பாட்டாளர் துணை ஆணையர் ரெனாடோ ஹிங்லே தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது, பிரேசிலைச் சேர்ந்த இரு விளையாட்டாளர்களான யாகோ டோராவுக்கும் இத்தாலோ ஃபெரேராவுக்கும் அறை இறுதி போட்டி நடந்துகொண்டிருந்தது.

நிலவரத்தைக் கண்காணித்து மீண்டும் போட்டியைத் தொடங்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுநீர்கடல்போட்டிநியூசிலாந்து