லண்டன்: துருக்கியிலிருந்து பிரிட்டன் சென்றுகொண்டிருந்த ஜெட்2 விமானத்தில் இரண்டு பயணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் விமானி விமானத்தை அவசரமாகப் பிரசல்சில் தரையிறக்கினார். இச்சம்பவம் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) நடந்தது.
சண்டையில் ஈடுபட்ட இரண்டு பயணிகளும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இனி ஜெட்2 விமானத்தில் பயணம் செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைகலப்பு தொடர்பான படங்களும் காணொளிகளும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
விமானம் புறப்பட்டு மூன்று மணி நேரம் கழித்து சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. துருக்கியின் அன்டால்யாவில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் செல்ல கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் ஆகும்.

