பிரிட்டன் விமானப்படைத் தளத்தைத் தாக்க சதி; ஈரானிய உளவாளிகள்மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

பிரிட்டன் விமானப்படைத் தளத்தைத் தாக்க சதி; ஈரானிய உளவாளிகள்மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

படம்: ஏஎஃப்பி

11 Nov 2026 - 6:17 pm

1 mins read

நியூயார்க்: பிரிட்டன் விமானப் படையின் ஃபேர்ஃபோர்ட் விமானத்தளம்மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதில் தொடர்பிருப்பதாக ஈரானிய உளவாளிகள் மூவர்மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

முகம்மது பாகர் சாத் தாவூத் அல்-சாதி, மோசென் மொகாஜேரி, முகம்மது அலி அல்-ஹசானி ஆகிய மூவரில், 35 வயது அல்-ஹசானி மட்டும் ஏற்கெனவே நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வந்த அத்தளத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் செயல்பட்டதை உள்ளூர் விவசாயி ஒருவர் பார்த்து பிரிட்டன் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

வாகனங்களை அத்தளத்தை நோக்கி ஓட்டிச் செல்ல அல்-ஹசானி வழிகாட்டினார் என்றும் அவற்றில் எரிபொருள் உருளைகள் இருந்தன என்றும் அமெரிக்கக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான உலோகப் பொருள்களை வாங்கவும் வாகனங்களை மாற்றி அமைக்கவும் அவர் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

நியூயார்க் சிறையிலுள்ள அல்-சாதி அச்சதித்திட்டத்தை ஒருங்கிணைக்க மற்ற இருவருக்கும் குறியீட்டுத் தகவல்களை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கப் படையினர் தங்கியிருக்கும் ராணுவத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடும் எவர்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி டாட் பிளான்ச் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்