புத்ராஜெயாவில் அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்து விசாரணை

புத்ராஜெயாவில் அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்து விசாரணை

1 mins read
859971fd-2f79-481a-b82f-586cc964f72d
மலேசியப் பிரதமரின் அதிகாரபூர்வ வசிப்பிடத்துக்கு எதிரே பேரணியாகத் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்கத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

கோலாலம்பூர்: புத்ராஜெயாவில் சனிக்கிழமை (ஜூன் 29) நடந்த அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்து காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

வளாகத்துக்குச் சொந்தக்காரரிடம் இருந்து அனுமதி பெறாமல் அந்தப் பேரணி நடைபெற்றதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகம்மது ஈஸா கூறினார்.

அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அச்சிடப்பட்ட கறுப்பு நிற டீ-சட்டை அணிந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மலேசியப் பிரதமரின் அதிகாரபூர்வ வசிப்பிடத்துக்கு எதிரே பேரணியாகத் திரண்டு அரசாங்கத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அண்மையில் டீசல் விலை உயர்த்தப்பட்டது, பெட்ரோல் மானியம் அனேகமாக நீக்கப்படுவது, அரசாங்கச் சுகாதாரச் சேவைகளைத் தனியார்மயமாக்க பரிந்துரைத்தது, வெள்ளை அரிசிக்குத் தட்டுப்பாடு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசாங்கத் தலைவர்களைப் பேரணி ஏற்பாட்டுக் குழுவினர் குறைகூறினர்.

இந்நிலையில், அந்தப் பேரணி சட்டத்துக்குப் புறம்பானது எனக் காவல்துறை ஆணையர் ருஸ்டி வியாழக்கிழமை (ஜூன் 27) கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
பேரணிகோலாலம்பூர்டீசல்