சாபாவில் மலையேறும் குழுவுக்கு பாகாங் இளவரசர் தலைமை ஏற்பார்

சாபாவில் மலையேறும் குழுவுக்கு பாகாங் இளவரசர் தலைமை ஏற்பார்

1 mins read
மலையேறும் குழு செவ்வாய்க்கிழமை பயணத்தை மேற்கொள்ளும்
4fdb29b7-a622-490c-81e1-6ea961c38fce
மலேசிய மாநிலமான சாபாவில் உள்ள கினபாலு மலை. - படம்: BJORN OLESEN
multi-img1 of 2

குவாந்தான்: கிழக்கு மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள கினாபாலு மலையை ஏறத் திட்டமிடும் குழுவுக்குத் தலைமை ஏற்று வழிநடத்த பாகாங் மாநில இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மகோத்தா போர்னியோ என்று பெயரிடப்பட்ட பயணக் குழு அந்த திட்டத்தை திங்கட்கிழமை (மே 11) முதல் புதன்கிழமை (மே 13) வரை மேற்கொள்ளும்.

பாகாங் அரச இல்லத்தின் பாதுகாப்பாளரான தளபதி முகம்மது சஹாரி யாஹ்யா, சாபா மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவைப் பட்டத்து இளவரசர் ஹசனல் இப்ராம் அலம் ஷா திங்கட்கிழமை (மே 11) மதியம் 1 மணியளவில் மலையேறும் குழுவினருடன் வந்து சேர்வார் என்று கூறினார்.

அங்கு சாபா மாநில ஆளுநரான மூசா அமானை சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்வார் எனவும் திரு சஹாரி தெரிவித்தார்.

மலையேறும் குழு செவ்வாய்க்கிழமை பயணத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசருடன் மலேசிய அரச விமானப் படையின் சிறப்புப் பிரிவினரும் அரச மலேசிய காவல்படையின் முக்கிய அதிகாரிகளும் உடன் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகாங், சாபா ஆகிய இருமாநில ஒற்றுமையையும் உத்திப்பூர்வ ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதோடு மக்கள் ஒருங்கிணைப்பையும் மலேசிய நாட்டுப் பற்றை வளர்க்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று திரு சஹாரி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்