தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பேரங்காடிக்கான நடைமுறை துரிதமாகும்: நியூசிலாந்து

2 mins read
cf2ca8fa-80e0-401b-b603-4f605e4a9be2
பலரசக்குச் சந்தையில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி போட்டியாளர்களை ஒதுக்கவோ நீக்கவோ முயலும் நிறுவனங்கள்மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று நியூசிலாந்து தெரிவித்தது. - படம்: புளூம்பர்க்

வெல்லிங்டன்: புதிய பேரங்காடிகளுக்கு அனுமதி வழங்குவதைத் துரிதப்படுத்த நவம்பர் மாதத்தில் புதிய சட்டங்களை நியூசிலாந்து அறிமுகம் செய்யவிருப்பதாக புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது. போட்டித்தன்மையை அதிகரித்து பொருள்களின் விலையைக் குறைக்க அந்தச் சட்டங்கள் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் விதிமுறைகள் புதிய பேரங்காடிகளைத் திறப்பதற்கும் ஏற்கெனவே உள்ள பேரங்காடிகளை விரிவுபடுத்துவதையும் எளிமையாக்கும் என்று நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் தெரிவித்தார்.

“போட்டித்தன்மையை அதிகரித்து நியூசிலாந்து மக்களுக்கு இன்னும் சிறந்த விலையில் பொருள்களை விற்க புதிய பேரங்காடிகளுக்கான விரைவுப் பாதையை உருவாக்குகிறோம்,” என்று திருவாட்டி வில்லிஸ் சொன்னார்.

கடுமையான தணிக்கை நடைமுறைகளும் மெதுவான ஒப்புதல் நடைமுறைகளும் நாட்டின் பலசரக்குத் துறையில் கால் பதிக்க விரும்பும் புதிய போட்டியாளர்களைத் தடுக்கிறது என்றார் அவர்.

நியூசிலாந்தின் பலசரக்குத் துறையில் ஃபூட்ஸ்டஃப்ஸ் நிறுவனமும் ஆஸ்திரேலியாவின் வூல்வொர்த்ஸ் நிறுவனKமும் தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றன.

அவற்றை மாற்றியமைக்கும்படி ஒருசிலர் கூறியபோதும், “அந்தப் பேரங்காடிகளின் விநியோகத் தொடர்களை மாற்றியமைப்பதற்கான தீர்மானத்தை எடுப்பது சாதாரணம் அல்ல,” என்றார் திருவாட்டி வில்லிஸ்.

மாறாக, புதிய பேரங்காடிகளின் வரவை நெறிப்படுத்தும் என்ற அவர், ஒட்டுமொத்த ஒப்புதல் நடைமுறையையும் மேற்பார்வையிடவும் வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மாற்றியமைக்கவும் தனி ஒரு அதிகாரப் பிரிவு நியமிக்கப்படும் என்றார்.

சந்தை அதிகாரத்தைப் பயன்படுத்தி போட்டியாளர்களை ஒதுக்கவோ நீக்கவோ முயலும் நிறுவனங்கள்மீது வழக்குத் தொடுக்கப்படும் என்றும் திருவாட்டி வில்லிஸ் சொன்னார்.

2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பேரங்காடியைத் திறந்த அமெரிக்கச் சில்லறை வர்த்தகமாக கோஸ்ட்கோ, அரசாங்கத்தின் புதிய விதிகள் தனது நிறுவனத்தை எதிர்காலத்தில் விரிவுபடுத்த உதவும் என்றார்.

நியூசிலாந்தில் உள்ள ஐந்து நிறுவனங்களும் பலசரக்குத் துறையில் கால் பதிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்