தவெக அரசை எதிர்த்து தமிழக மாநிலத் தலைநகர்களில் போராட்டம்

தவெக அரசை எதிர்த்து தமிழக மாநிலத் தலைநகர்களில் போராட்டம்

கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கான கண்டனப் போராட்டங்கள் தமிழக மாவட்டத் தலைநகர்களில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும்
படம்: இந்து தமிழ் திசை

22 Oct 2026 - 5:26 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் அண்மையில் நடந்த தாராபுரம் தொகுதித் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி (நாதக) வேட்பாளர் கார்த்திகா உட்பட்ட கட்சி நிர்வாகிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

அதனைக் கண்டித்து, ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சிக்கு எதிராக சனிக்கிழமை (அக்டோபர் 24) மாநிலத்தின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

அதன் விவரங்கள் குறித்து இந்து தமிழ் திசை ஊடகம் வியாழக்கிழமை (அக்டோபர் 22) செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சி வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமாகிய மு. கார்த்திகா, அவரது கணவரும் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை ஒருங்கிணைப்பாளர் முருக. சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் உட்பட மேலும் பல கட்சியினரை பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளதாக நாதக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாதக அதன் அறிக்கையில் குற்றஞ்சாட்டியது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுரையின்படி, குறிப்பிட்ட தேதியன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அவற்றில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் மாநில, மண்டல, மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் கட்சி உறவுகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளும்படி அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்