தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு: வெளியான எரிவாயு 500,000 சமையல் எரிகலன்களை நிரப்பக்கூடியது

1 mins read
8cb33922-9670-4487-ae63-c93a6a52dbe4
புத்ரா ஹைட்சில் வெடிப்புக்குப் பிந்திய நிலவரம். - கோப்புப் படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வெடிப்பு நேர்ந்தது.

அதில் வெளியான எரிவாயு, அரை மில்லியன் 14 கிலோகிராம் சமையல் எரிகலன்களை நிரப்பக்கூடியது என்று தெரியவந்துள்ளது. மலேசியாவின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொடர்பு ஆகியவற்றறுக்கான சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஆவணங்களில் இது தெரியவந்துள்ளது.

அச்சம்பவத்தில் சுமார் 400 மில்லியன் கன அடி எரிவாயு வெளியானதாக பெட்ரோலியப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஹுஸ்தின் செ அமாட் தெரிவித்தார். தீயணைப்பு, மீட்புப் பிரிவிடமிருந்து பெற்ற தகவல்களை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.

சம்பவத்தில் வெளியான எரிவாயு ஏழு நொடிகளில் தீப்பற்றிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புத்ரா ஹைட்சில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நிகழ்ந்த வெடிப்பில் 511 வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அந்த வெடிப்பினால் ஏற்பட்ட தீயின் வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியசைத் தாண்டியத;. 30 மீட்டருக்கும் மேலான உயரத்தில் தீ எரிந்தது.

குறிப்புச் சொற்கள்