தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்ரா ஹைட்ஸ் தீ: சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்க அதிக செலவாகக்கூடும்

1 mins read
91e84bdb-6abd-462c-9f6d-f03e187f90df
தீச்சம்பவத்தில் சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்த்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியத் தலைநகர் அருகில் பெட்ரோல் நிலையத்தில் எரிவாயுக் குழாய் வெடித்து பயங்கரத் தீச்சம்பவம் ஏற்பட்டது.

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் நிகழ்ந்த அத்தீச்சம்பவத்தில் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்க பேரளவில் செலவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த ஒவ்வொரு வீட்டையும் பழுதுபார்க்க பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் செலவாகலாம் என்று மலேசியாவைச் சேர்ந்த காப்புறுதிச் சீரமைவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் கேசவன் கூறினார்.

வீடுகள் எந்த அளவுக்குச் சேதமடைந்துள்ளன என்பதை தெரிந்துகொள்ள அறிக்கைகள் தயார் செய்துவரப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவை காப்புறுதி நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது விரைவுபடுத்தப்படும் என்றும் திரு ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

சேதமடைந்த வீடுகளுக்குள் நுழைந்து மதிப்பீடு செய்வது அபாயகரமானது என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும் கடந்த மூன்று நாள்களில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கருணை அடிப்படையில், பாதிக்கப்பட்டோருக்குக் காப்புறுதி நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையுடன் கட்டணத் தள்ளுபடி, சலுகைகள், இலவச சேவை ஆகியவற்றை வழங்கியிருப்பதாகத் திரு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சேதமடைந்த வாகனங்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தகுதி பெற்றவர்களுக்கு அதிகாரிகளிடமிருந்து ஆதரவு ஆவணங்கள் ஏதுமின்றி மிக விரைவாக 50,000 ரிங்கிட் ($15,164) வழங்கப்பட்டதாகத் திரு ராமகிருஷ்ணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்