தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘குவாட்’ கூட்டணி இந்தியா, ஜப்பானுக்கு முக்கியம்: இந்திய வெளியுறவு அமைச்சு

2 mins read
c566f9a5-a9c9-4a77-811e-f5ce650420ae
வாஷிங்டனில் ஜூலை 1ஆம் தேதி நடந்த இந்தோ-பசிபிக் குவாட் உடனான செய்தியாளர் கூட்டத்தில் (இடமிருந்து) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டேஷி இவாயா, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ‘குவாட்’ (Quad) கூட்டமைப்பு, முக்கியமான தாதுக்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முக்கியமானது என்று இந்திய வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளது.

அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, ஜப்­பான் ஆகிய நான்கு நாடு­கள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

15வது இந்திய-ஜப்பான் வருடாந்தர உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பான் செல்கிறார். எட்டாவது முறையாக ஜப்பானுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

அந்தச் சந்திப்பில் மோடி, குவாட் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டமும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும். அந்தத் திட்டத்திற்காக ஜப்பானின் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை 508 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகிறது. இருதரப்பு வணிகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் ஆழமான ஒத்துழைப்பை மோடியின் பயணம் வலுப்படுத்தும்.

ஜப்பானைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்ற சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜினுக்கு மோடி செல்கிறார். இந்த மாநாட்டின்போது இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் இந்தியப் பொருள்கள்மீது விதித்த வரி தொடர்பாக வாஷிங்டன் உடனான உறவு கசப்பாகி உள்ளநிலையில், இந்த ஆண்டு குவாட் தலைவர்களின் உச்சநிலைக் கூட்டத்தை இந்தியா நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான தாதுக்களின் அதிகரித்து வரும் சீனாவில் ஆதிக்கம் குறித்த கவலைகளை குவாட் நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.

மோடியின் சீனப் பயணம், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறுகிறது. இது இரு நாட்டு உறவை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மோடி தனது பயணத்தின்போது சில இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உட்பட 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்