தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தில் அரியவகைப் புலிக்குட்டிகள்

1 mins read
5ddcc72a-c75e-40f4-af94-d29a51655008
காய்ங் கிராச்சன் தேசிய பூங்காவில் வங்காளப் புலிக்குட்டிகள் காணப்பட்டன. - காணொளிப் படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் தேசிய பூங்கா ஒன்றில் மூன்று அரியவகை புலிக்குட்டிகள் காணப்பட்டுள்ளன.

காய்ங் கிராச்சன் தேசிய பூங்காவில் அரியவகை வங்காளப் புலி ஒன்று, மூன்று குட்டிகளை வளர்த்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காப்பகப் பாதுகாவலர்கள் முதலில் ஒரு வங்காளப் புலிக்குட்டியை மட்டுமே கண்டனர். ஆனால், இந்த வாரம் மீட்கப்பட்ட கேமரா பதிவுகளில் மூன்று புலிக்குட்டிகள் இருப்பது தெரிந்தது.

சென்ற ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்த கேமராக்களிலிருந்து அந்தக் காணொளிகள் மீட்கப்பட்டன.

“ஒரு புலி மூன்று குட்டிகளை வளர்ப்பதை நாங்கள் பதிவுசெய்திருப்பது இதுவே முதல்முறையாகும்,” என்று காய்ங் கிராச்சன் தேசிய பூங்காவின் தலைவர் மொங்கோல் சைப்பக்டீ வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) அறிக்கை ஒன்றில் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

வங்காளப் புலிகள் காணப்படுவது அரிய நிகழ்வாகும்.

குறிப்புச் சொற்கள்