ஜோகூரில் 2025ல் சாதனை அளவு முதலீடு

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத் திட்டத்தின் பிரதிபலிப்பு

ஜோகூரில் 2025ல் சாதனை அளவு முதலீடு

1 mins read
711d89c3-3c59-41e6-b396-5fa8c6f95e37
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல (JS-SEZ) திட்டம், உற்பத்தி, மின்னிலக்க உள்கட்டமைப்புத் திட்டங்களை ஜோகூரில் அதிக அளவில் ஈர்த்துள்ளது. - படம்: சாவ் பாவ்

கோலாலம்பூர்: மலேசியாவின் முதலீட்டு மையமாக ஜோகூர் மாநிலம் உருவெடுத்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் அம்மாநிலம் 110 பில்லியன் ரிங்கிட் (35.5 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல (JS-SEZ) திட்டம், உற்பத்தி, மின்னிலக்க உள்கட்டமைப்புத் திட்டங்களை அங்கு அதிக அளவில் ஈர்த்துள்ளதே இதற்குக் காரணம்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு மலேசியாவின் ஒட்டுமொத்த முதலீடு 426.7 பில்லியன் ரிங்கிட் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இது 2024ஆம் ஆண்டைவிட 11 விழுக்காடு அதிகமாகும். இந்த முதலீடுகள் மூலம் கிட்டத்தட்ட 245,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய நிறுவனங்கள் 219.6 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்திருப்பது நாட்டின் மீதான நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக முதலீடு, வணிகம், தொழில்துறை துணை அமைச்சர் சிம் ஸி ஸின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளில் சிங்கப்பூர் (58.3 பில்லியன் ரிங்கிட்) முதலிடத்திலும், சீனா (58 பில்லியன் ரிங்கிட்) இரண்டாமிடத்திலும் உள்ளன. ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காசி நிர்ணயித்த 100 பில்லியன் ரிங்கிட் இலக்கைத்தாண்டி, ஜோகூர் மாநிலம் முதலீட்டில் முன்னிலை வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்