தோக்கியோ: வரலாறு காணாத அளவில் மழை பெய்ததால் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் உள்ள நரீத்தா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) சிக்கித் தவித்தனர்.
சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.
சிபா மாநிலத்தில் 360 மில்லிமீட்டருக்கும் அதிக உயரத்துக்கு மழைநீர் சேர்ந்தது. அப்பகுதி, தோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ளது.


