தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரீஸ் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து

1 mins read
d34e245a-40f7-41d4-93d0-e00cdbb95ebd
கிரீஸ் நாட்டு தீவின் அருகில் அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. - படம்: இணையம்

கிரீஸ்: கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி அருகிலுள்ள துருக்கி நாட்டின் கடற்கரையிலிருந்து அகதிகள் படகு ஒன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 3) அதிகாலை பயணத்தைத் தொடங்கியுள்ளது. அப்போது, திடீரென அவர்கள் பயணம் செய்த படகு தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து, நடுக்கடலில் உயிருக்குப் போராடிய 23 பேரை கிரீஸ் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படகில் பயணம் செய்த அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் அவர்களது எண்ணிக்கை குறித்தும் எந்தவொரு தகவலும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

மேலும், அகதிகள் யாரேனும் மாயமானார்களா என்று விசாரணை நடைபெற்று வரும் சூழலில், விபத்து நடந்த கடல் பகுதியில் மூன்று கடலோரக் காவல் படையின் கப்பல்கள், விமானப் படையின் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்