ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற ஆடவரைக் காணவில்லை.
அவரை முதலைகள் தாக்கி உண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆடவரின் உடல் உறுப்புகள் ஒரு முதலையின் வயிற்றுக்குள் இருப்பதையும் அவர்கள் உறுதிசெய்தனர்.
மாண்ட ஆடவரின் பெயர் கெவின் டார்மோடி. அவருக்கு 65 வயது. கெவின் கடைசியாக ஏப்ரல் 29ஆம் தேதி கென்னடிஸ் பெண்ட் எனப்படும் பகுதியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குவீன்ஸ்லாந்தில் உள்ள அந்தப் பகுதியில் முதலைகள் அதிக அளவில் இருக்கும்.
ஆடவர் காணாமல் போன பிறகு காவல்துறை அதிகாரிகள் ஆடவரை இரண்டு நாள்களாகத் தேடினர்.
தேடுதலின்போது அதிகாரிகள் இரண்டு முதலைகளைக் கொன்றனர. அவற்றில் ஒன்றின் வயிற்றுக்குள் கெவினின் உறுப்புகள் இருந்ததாக அவர்கள் கூறினர்.
கெவின் காணாமல் போன இடத்தில்தான் அந்த முதலைகள் இருந்ததாகவும் அவை இரண்டும் இணைந்துதான் அவரைக் கொன்றதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது அவரது உடலுறுப்புகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
கெவின் அனுபவம் கொண்ட மீனவர் என்றும் அந்தப் பகுதி சமூகத்தில் அவர் பிரபலமானவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


