பேங்காக்: தாய்லாந்தில் மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்த கோபுரத்தின் இடிபாடுகளை பேங்காக் நகர நிர்வாகம் அகற்றத் தொடங்கியுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் ஊழியர்கள் உயிரோடு இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது.
மலைபோல குவிந்திருக்கும் இடிபாடுகளை அகற்றுவதற்கு கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த அதிகாரிகளுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளையில், ஊழியர்கள் யாரேனும் உயிரோடு இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளைக் கண்டறிந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அது அறிவுறுத்தியுள்ளதாக பேங்காக் ஆளுநர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 4) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இன்னும் காணவில்லை. ஒன்பது பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

