பெய்ஜிங்: சீனாவின் தென்பகுதியில் உள்ள கடற்பகுதியில் 10 வயது சிறுவன் தனியாகப் படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று வீசிய பலத்த காற்றாலும் பொங்கி எழுந்த பேரலைகளாலும் அவன் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டான்.
கடலோரப் பகுதியில் உள்ள சிறுவனின் கிராமத்திலிருந்து அவன் பல கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டான்.
சிறுவனைக் காணவில்லை என்று சீன நேரப்படி மார்ச் 21 இரவு 8.30 மணி அளவில் அவனது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நடுக்கடலில் அச்சிறுவன் தமது படகில் இருந்தவாறு உதவி கேட்டு அழைத்ததை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த மீன்பிடிப் படகின் மாலுமி பார்த்ததாக சீன ஊடகம் தெரிவித்தது.
அப்படகைச் சேர்ந்தவர்கள் அச்சிறுவனை மீட்டனர்.
நாள் முழுவதும் சாப்பிடாமல் வாடியிருந்த அச்சிறுவனுக்கு அவர்கள் ரொட்டியும் பாலும் தந்னர்.
சிறுவன் கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் நடுக்கடலில் தனியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
தொடர்புடைய செய்திகள்
சிறுவனின் உடல்நலத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
ஆனால் நடுக்கடலில் இரவு முழுவதும் தனியாக இருந்தது சிறுவனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

