வாஷிங்டன்: அமெரிக்க அரசுத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் ஆட்குறைப்பு செய்யப்பட இருக்கின்றனர்.
இதற்காக வரி அமலாக்கத்துறை அதிகாரிகள், விண்கல விஞ்ஞானிகள், வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இலோன் மஸ்க்கும் குறிவைத்துள்ளனர்.
அமெரிக்க அரசுத் துறையை மறுசீரமைக்க அமெரிக்க நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிய பிறகு இந்நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்க அரசாங்க இயக்குத் திறன் துறைக்கு இலோன் மஸ்க் தலைமை தாங்குகிறார்.
அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் ஜனவரி மாதத்தில் பதவி ஏற்றதிலிருந்து ஆயிரக்கணக்கானோரை இத்துறை ஆட்குறைப்பு செய்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்துறையை மறுசீரமைக்க அதிபர் டிரம்ப் இலக்கு கொண்டுள்ளார்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்துக்கு பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர் மிச்சமாகும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஆட்குறைப்பு நடவடிக்கைக்குத் தலைமைதாங்கும் திரு மஸ்க்கை அவர் நாட்டுப்பற்று மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார்.