ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு 88.8பி. ரிங்கிட் முதலீடு

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு 88.8பி. ரிங்கிட் முதலீடு

படம்: பெர்னாமா

07 Nov 2026 - 2:41 pm

2 mins read

ஜோகூர் பாரு: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 88.83 பில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைப் பெற்றுப் பதிவுசெய்துள்ளதாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் தெரிவித்துள்ளார்

.இதன்மூலம் 28,755 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட மொத்த முதலீட்டில் 45 விழுக்காடு, அதாவது 40.30 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன எனக் குறிப்பிட்ட அவர், இத்திட்டங்கள் வாயிலாக 12,796 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

“இத்திட்டத்தில் பேரளவிலான வாய்ப்புகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், இத்தகைய வாய்ப்புகளைச் சிறந்த நல்விளைவுகளாக மாற்றுவதே இரு நாடுகளின் முன்னுள்ள உண்மையான சவாலும் அர்ப்பணிப்புமாகும். எனவே, இந்தச் சாதகமான உத்வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். இது இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் மற்றும் வணிக சமூகத்துக்கும் பயனளிக்கும்,” என்று அமைச்சர் அக்மல் நஸ்‌ருல்லா தெரிவித்தார்.

சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் உடன் இணைந்து, தொடக்கநிலை ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சர்நிலைக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜோகூர் முதல்வர் ஓன் ஹாஃபிஸ் காசியும் கலந்துகொண்டார்.

அக்மல் நஸ்ருல்லாவின் கூற்றுப்படி, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் முன்னுரிமைத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்கவும் இரு நாடுகளாலும் எடுக்கப்பட்ட உத்திபூர்வ நடவடிக்கையாக இந்த ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சர்நிலைக் குழு விளங்குகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்பொருளியல்முதலீடு