நினைவுப் பொருள் விற்கும் கடையில் பணியாற்றும் இயந்திர மனிதன்

1 mins read
304f65c3-8c73-4063-a311-80ea280f4d18
நரிட்டா விமான நிலையத்தில் நினைவுப் பொருள்கள் விற்கும் கடையில் வாடிக்கையாளர்கள் தேர்வுக்கேற்ப பொருள்களை விற்பனை செய்யும் இயந்திர மனிதன். - படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்

சிபா: ஜப்பானின் சிபா வட்டாரத்தில் உள்ள நரிட்டா அனைத்துலக விமான நிலையத்தில் இருக்கும் நினைவுப் பொருள்கள் விற்கும் கடையில் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கேற்ப பொருள்களை இயந்திர மனிதன் விற்பனை செய்துவருகிறது.

ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நரிட்டா விமான நிலையமும் நோமுரா ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து சோதனை முயற்சியாக இயந்திர மனிதனைக் களமிறக்கியுள்ளன.

அந்த நினைவுப் பொருள் விற்பனையகத்தை நோமுரா ஆராய்ச்சி நிறுவனம் கட்டமைத்தது.

அக்டோபர் 10ஆம் தேதி முதல் ‘பிக்ரூ ஸ்டோர்’ எனும் பெயரில் செயல்படும் கடை, அந்த விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இருக்கும் உள்நாட்டு விமானப் புறப்பாட்டு வாயிலுக்கு அருகே அமைந்துள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதிவரை அக்கடை திறந்திருக்கும் என்றும் பின்னர் சோதனையோட்டத்தின் தரவுகளை இவ்வாண்டு இறுதி அல்லது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நரிட்டா விமான நிலையத்தின் நிர்வாகம் மதிப்பாய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்