கூடுதல் காலம் மலேசியாவில் இருக்க ரொஹிங்யா மக்கள் வேண்டுகோள்

கூடுதல் காலம் மலேசியாவில் இருக்க ரொஹிங்யா மக்கள் வேண்டுகோள்

படம்: ஏஎஃப்பி

26 Nov 2026 - 10:06 am

1 mins read

கோலாலம்பூர்: ரொஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் இனப் படுகொலையில் ஈடுபட்டது என்று அனைத்துலக நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்புக்கு இணங்க மியன்மார் நடைமுறைகளைச் செயல்படுத்தும் வரை தங்களைத் தொடர்ந்து மலேசியாவில் இருக்க அனுமதிக்குமாறு அந்நாட்டில் உள்ள ரொஹங்யா மக்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நவம்பர் மாதம் 19ஆம் தேதி தீர்ப்பு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பற்பல ஆண்டுகளாக அவதிக்கு ஆளான தாங்கள் மியன்மார் திரும்பக்கூடும் என்ற நம்பிக்கை ரொஹிங்யா மக்களிடம் பிறந்துள்ளது. அதேவேளை, மியன்மாரின் ராணுவ அரசாங்கம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாலும் அது அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்கி நடந்துகொள்ளும் என்ற உத்தரவாதம் இல்லாததாலும் ரொஹிங்யா மக்கள் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

தனது அகதிகள் பதிவு முறையை முழுமையாக மாற்றிவரும் மலேசியா ஆயிரக்கணக்கான ரொஹிங்யா மக்களை மூன்றாவதாக ஒரு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்