புத்ராஜெயா: வெளிநாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் ரோன்95 ரக பெட்ரோலை வாங்கவும் அதை விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்ட தடை ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து விரிவாகிறது.
இது, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றார் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் அலி.
இதுவரையில் இத்தகைய விதிமீறல்களுக்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு வந்தனர். புதிய சட்டத் திருத்தத்தின்படி, ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மீதும் நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
மானிய விலையிலான எரிபொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் கடத்தல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், கண்காணிப்பு பலப்படுத்தப்படும் என்ற அமைச்சர், இது தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் பற்றி அறிந்தால் உடனடியாகப் புகார் அளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

