மாஸ்கோ/கியவ்: ஈஸ்டர் விடுமுறை தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரேனும் ஏற்படுத்திக்கொண்ட தற்காலிகச் சண்டை நிறுத்தத்தை மீறியதாக இருநாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக்கொண்டன.
கிழக்கு ஐரோப்பாவில் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெறுகின்றன. முன்னதாக, ரஷ்யா, உக்ரேன் இருநாடுகளும் சனிக்கிழமை மாலை நான்கு மணி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரையில் 32 மணிநேரச் சண்டை நிறுத்தத்துக்கு உடன்பட்டன.
எல்லையில் உள்ள இரண்டு ரஷ்யப் பகுதிகளின் ஆளுநர்கள், குர்ஸ்க், பெல்கொரொட் ஆகிய வட்டாரங்களில் உக்ரேனிய ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தி அதில் ஐவர் காயமடைந்ததாகத் தெரிவித்தனர்.
உக்ரேனிய ராணுவத் தளபதி, ரஷ்யப் படைகள் சண்டை நிறுத்த உடன்பாட்டை 469 முறை மீறியதாகக் குற்றஞ்சாட்டினார். அவற்றில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆளில்லா வானூர்தி வழியான தாக்குதல்கள் அடங்கும் என்று அவர் விவரித்தார்.
சண்டை நிறுத்த விதிமீறல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

