347 பில்லியன் ரிங்கிட் பசுமை முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய சரவாக்

347 பில்லியன் ரிங்கிட் பசுமை முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய சரவாக்

படம்: த ஸ்டார்

07 Nov 2026 - 2:40 pm

1 mins read

கூச்சிங்: வட்டார அளவில் குறைந்த கரிம ஆற்றல், தொழிற்துறை மையமாக உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, 24 ஆண்டு கால நெட் ஸீரோ 2050 உத்திபூர்வ, கரிமத் திட்டத்தை மலேசியாவின் சரவாக் மாநிலம் தொடங்கியுள்ளது.

‘நெட் ஸீரோ’ என்பது வளிமண்டலத்தில் வெளிடப்படும் கரியமில வாயு போன்ற வாயுக்களின் அளவும் இயற்கையாகவோ அல்லது தொழில்நுட்ப ரீதியாகவோ பூமியிலிருந்து வெளியேறும் அவற்றின் அளவும் சமநிலையில் இருப்பதைக் குறிப்பதாகும்.

வெள்ளிக்கிழமை இரவு (நவம்பர் 6) நடைபெற்ற நிகழ்வில் இத்திட்ட வரைவை அறிமுகப்படுத்தி உரையாற்றிய முதல்வர் அபாங் ஜொஹாரி ஓபெங், கரியமில வாயு வெளியேற்றத்தை 35 விழுக்காடு குறைத்தல், 347 பில்லியன் ரிங்கிட் பசுமை முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் தோராயமாக 223,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை இந்த உத்தி இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மாநில எரிசக்தி, சுற்றுப்புற நீடித்த, நிலைத்தன்மை அமைச்சால் உருவாக்கப்பட்ட இந்த உத்திபூர்வத் திட்டம் எரிசக்தி, தொழிற்துறை, போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட எட்டு முக்கிய துறைகளில் 15 உத்திபூர்வ முன்னுரிமைகளை வகுத்துள்ளது. மேலும் இதற்குத் துணைபுரியும் வகையில் ஏழு ஒருங்கிணைந்த செயல்பாட்டுக் கூறுகளும் இதில் அடங்கும்.

இந்தத் திட்டம் நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் முடக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்த திரு அபாங் ஜொஹாரி, 2050ஆம் ஆண்டிற்குள் நிகர எதிர்மறை வெளியேற்றத்தை நிலைநிறுத்தும் பொருட்டுப் பொருளியல் வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அது சீராகச் சமநிலைப்படுத்தும் என்றார்.

குறிப்புச் சொற்கள்