தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா: விரைவு, சுற்றுலாப் பேருந்துகளில் இருக்கை வார் அணிவது கட்டாயம்

1 mins read
94e4e93b-05fb-43da-abdd-4d6942a459b0
விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள், பயணிகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 300 ரிங்கிட் அழைப்பாணை அனுப்பப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். - படம்: மலே மெயில்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் விரைவு, சுற்றுலாப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இருக்கை வார் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை வெளியிட்டது.

2020ஆம் ஆண்டு முதல் தயார் செய்யப்பட்ட விரைவுப் பேருந்துகள் அனைத்திலும் கட்டாயம் இருக்கை வார் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

பேருந்து நிறுவனங்கள் இருக்கை வார் அமைக்க போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

மேலும் போக்குவரத்து நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பேருந்து புறப்படும்போது அனைத்துப் பயணிகளும் இருக்கை வார் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டது. 

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருக்கை வார் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள், பயணிகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 300 ரிங்கிட் அழைப்பாணை அனுப்பப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். 

மலேசியாவில் பாதுகாப்பான போக்குவரத்தை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் மிக முக்கியமானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்