பிரசல்ஸ்: 2025ஆம் ஆண்டில் இரண்டாவது ஆக வெப்பமான மே மாதம் பதிவானதாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதன்கிழமை (ஜூன் 11) தெரிவித்தனர்.
இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டுமே 2025ஆம் ஆண்டு மே மாதத்தைவிட வெப்பமாக இருந்தது.
பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத வெப்பநிலை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
1850லிருந்து 1900 வரையிலான காலகட்டத்தில் பேரளவிலான புதைபடிவ எரிபொருள் எரிக்கும் முறை தொடங்கியது. அக்காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை சராசரியாக 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த 21 மாதங்களில் சராசரி உலகளாவிய வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தைவிட 1.5 டிகிரி செல்சியசுக்கும் மேலாகப் பதிவானது.
கூடிய விரைவில் இந்த 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பைவிட வெப்பநிலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருள் எரிப்பு காரணமாக கரிம வெளியேற்றம் அதிகரிப்பதே பருவநிலைக்கு முக்கிய காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுதான் உலகின் ஆக வெப்பமான ஆண்டாகப் பதிவாகி உள்ளது.