தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பசுமை ஹைட்ரஜன், எரிசக்தியை இந்தியாவில் உருவாக்க இணக்கக் குறிப்பு செய்துகொண்ட செம்ப்கார்ப்

1 mins read
8921ccd7-e8a6-4769-b7ac-8126066baad8
இந்தியாவின் பாரத் பெட்ரோலியக் கூட்டுரிமை நிறுவனம் சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவனத்துடன் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு - இந்தியாவின் பல இடங்களில் பசுமை ஹைட்ரஜன், பசுமை எரிசக்தித் திட்டங்களை உருவாக்குவதற்கான இணக்கக் குறிப்பில் இந்தியாவின் பாரத் பெட்ரோலியக் கூட்டுரிமை நிறுவனமும் சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவனமும் (ஏப்ரல் 8) கையெழுத்திட்டுள்ளன.

பசுமை அம்மோனிய உற்பத்தி, துறைமுக நடவடிக்கைகளிலிருந்து வெளியேறும் கரிமத்தைக் குறைப்பது, இதர பசுமை எரிபொருள் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிலும் இணக்கக் குறிப்பு கவனம் செலுத்தும்.

2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 500 கிகவாட்ஸ் வரை பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்குக் கொண்டுள்ளது.

அதற்காக படிம எரிபொருள் மீது சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு பசுமை எரிசக்தியில் முதலீடுகளை இந்தியா அதிகரிக்க முற்படும் வேளையில் சிங்கப்பூரும் இந்தியாவும் இணக்கக் குறிப்பைச் செய்துள்ளன.

பசுமை நிறைந்த பிற மாற்றுவழிகளைக் கண்டறிய பாரத் பெட்ரோலியக் கூட்டுரிமை நிறுவனம் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தை வலுப்படுத்துகிறது.

செம்ப்கார்ப் இவ்வாண்டு தொடக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் ஆலையையும் தொழிற்பூங்காவையும் அமைக்க ஒடி‌‌‌ஷா மாநிலத்துடன் ஒப்பந்தம் செய்தது.

இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜனை உருவாக்கத் திட்டமிடுகிறது. அதற்கு 125 கிகாவாட்ஸ் பசுமை எரிசக்தி தேவைப்படும்.

குறிப்புச் சொற்கள்