பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் 7 பேர் மாண்டனர். அவர்களில் இருவர் குழந்தைகள்.
மாண்ட இரண்டு குழந்தைகள் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி மாண்டுகிடந்தது அவ்வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டேடே பகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மாலை தீச் சம்பவம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் 40 வீடுகள் அழிந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
வாசல் சிறிதாக உள்ள ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் தீப்பிடித்தபின் வீட்டைவிட்டு அவர்கள் வெளிவரமுடியாமல் மாண்டதாகவும் கூறப்படுகிறது.
மாண்ட குழந்தைகளில் ஒருவர் 2 வயதுச் சிறுமி, மற்றொருவர் 12 வயதுச் சிறுவன்.
தீச்சம்பவத்தால் 60 குடும்பங்கள் தங்களது இருப்பிடங்களை இழந்துவிட்டன.
டேடே பகுதியில் மக்கள் கூட்டங்கூட்டமாகவும் ஒரே வீட்டில் பலபேர் வசிப்பதும் இயல்பான ஒன்று.