கெய்ரோ: காஸா முனையில் மூண்ட சண்டையில் ஏழு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாண்டோரில் ராணுவ அதிகாரி ஒருவரும் ஆறு ராணுவ வீரர்களும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 24) நடந்த சண்டையில் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
அந்த ஏழு பேரும் கான் யூனிஸ் பகுதியில் இருந்தபோது அவர்களது வாகனத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.