தாய்லாந்து: தலைநகர் பேங்காக்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான புயலால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை (மே 10) மாலை ஏறத்தாழ 5.45 மணிக்கு ஏற்பட்ட தீவிரம் மழைப்பொழிவால் இவ்வாறு ஏற்பட்டது.
பேங்காக்கின் தவீ வத்தானா மாவட்டத்தில் 60.5 மில்லிமீட்டர் வரையிலான மழைப்பொழிவு பதிவாகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாலைகள் மழைநீரில் மூழ்க, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்பைக் காட்டும் படங்களும் காணொளிகளும் தற்போது சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. வாகனங்களும் இயந்திரங்களும் ஆங்காங்கு சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைத் தவிர்க்கவும், வேளாண்மைப் பொருள்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

