கடும் வெப்பம்: ஜப்பானின் விலங்கியல் தோட்டத்தில் மூன்று சிங்கங்கள் மரணம்

கடும் வெப்பம்: ஜப்பானின் விலங்கியல் தோட்டத்தில் மூன்று சிங்கங்கள் மரணம்

2 mins read
1d7ed4dd-fc18-44f8-8503-2a79a78b5662
தாமா விலங்கியல் தோட்டத்தில் ஒரே வாரத்தில் உயிரிழந்த மூன்று சிங்கங்களில் ஒன்றான 15 வயது லுவெனா. - படம்: பிபிசி ஊடகம்
Google News Preferred Icon

தோக்கியோ: கோடைக்கால வானிலை காரணமாகக் கொடுமையான வெயிலை எதிர்த்துப் போராடும் ஜப்பானில் உள்ள விலங்கியல் தோட்டத்தில் ஒரே வாரத்தில் மூன்று பெண் சிங்கங்கள் வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்து விட்டன.

மேற்கு ஜப்பானில் உள்ள அந்தத் தோட்டத்தில் உயிரிழந்த அந்து மூன்று சிங்கங்களின் வயது மூன்றிலிருந்து 15 வரை என்று தெரிவிக்கப்பட்டது. அவை நீர்ச்சத்து இழப்பாலும் பல உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும் மரணம் அடைந்ததாக அங்கு நடத்தப்பட்ட மருத்துவக் கூராய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

“முதல்முறையாக இது போன்ற துயரத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். கடந்த ஆண்டும் வெப்பமாக இருந்தது, ஆனால் எங்களிடம் உள்ள சிங்கங்கள் இதுபோல நோய்வாய்ப்படவில்லை,” என்று விலங்கியல் தோட்டப் பிரதிநிதி மிவா கொசாகா ஊடகத்திடம் கூறினார்.

ஜப்பானின் வெப்பநிலை அண்மையில் அபாய அளவை எட்டிவருகிறது. மிகக் கொடுமையான 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் அளவுக்கு அதன் நகரங்களில் சில பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றன.

முகி என்ற மூன்று வயது சிங்கத்துக்கு பசியெடுக்கவில்லை. நிற்கக்கூட முடியாமல் இருந்த அச்சிங்கத்துக்கு ஊட்டச் சத்து மருந்துகளும் வெப்பம் தணிக்க காற்றோட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டும் அது ஜூலை 27ல் மரணமுற்றது.

இச்சிகோ என்ற 11 வயது சிங்கமும் நோய்வாய்ப்பட்டு ஜூலை 31ல் இறந்தது. லுவெனா என்ற 15 வயது சிங்கத்தின் உயிர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) பிரிந்தது.

முதற்கட்ட கூராய்வுகள் மூன்று சிங்கங்களும் வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்ட மருத்துவப் பிரச்சினைகளால் பாதிப்படைந்தன என்று தெரியவருகிறது.

விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் சோதனை முடிவுகளுக்குப் பிறகு அவை மரணமடைந்ததற்கான முழு காரணங்களும் வெளிவரும் என்று விலங்கியல் தோட்டம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்